-
லான்ஸ்வேல் பொதுப் பள்ளி
நான் முதன்முதலில் மேட்டிஃபிக்கை அறிந்தபோது, நான் மிகவும் பதற்றமாக இருந்தேன், ஏனென்றால் எனக்குத் தொழில் நுட்பவியல் சார்ந்த எண்ணம் அதிகம் இல்லை. ஆனால் இப்போது, எனக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் தோழமையாகிவிட்டது. குழந்தைகள் இதை மிகச்சிறப்பாக வரவேற்கிறார்கள்! அவர்கள் விளையாட்டுகளில் நல்ல தேர்ச்சி பெற்று வருகிறார்கள், இது அவர்களுடைய மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. அதிக ஆதரவு தேவைப்படும் குழந்தைகளும் இது மிகவும் நன்றாக இருப்பதைக் காண்கிறார்கள். அவர்களுடைய கருத்து உடனடியாகத் தெரிகிறது (!!), அவர்களுடைய முகங்களில் மிகச்சிறந்த புன்னகை மலர்கிறது.
மேரி ஹன்னாஃபோர்ட், 1ம் வகுப்பு ஆசிரியர்
-
இங்கிலாந்து பேஹெம்பரி தேவாலயத்தின் தொடக்கப்பள்ளி
குழந்தைகள் மேட்டிஃபிக்கை விரும்புகிறார்கள். அவர்கள் முந்தைய நாள் இரவு எந்தெந்தச் செயல்களைச் செய்தார்கள், எவ்வளவு சிறப்பாகச் செய்தார்கள் போன்றவற்றைபற்றிப் பேசுகிறார்கள். அத்துடன், ஆசிரியர் நிர்வாகப் பகுதியைப் பயன்படுத்தி, யார் என்ன செய்தார்கள், எவ்வளவு சிறப்பாகச் செய்தார்கள் என்பதை என்னால் பார்க்க இயலுகிறது, தேவைப்பட்டால் அவர்களுக்குத் தனியே கூடுதல் ஆதரவு வழங்க இயலுகிறது. இதை நாங்கள் பயன்படுத்தத் தொடங்கிச் சில மாதங்களே ஆகின்றன. எனினும், நாங்கள் மேட்டிஃபிக்கை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் மாணவர்களும் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டார்கள். எனவே, பிற பள்ளிகளுக்கும் எங்கள் கற்றல் சமூகத்திலுள்ள மற்றவர்களுக்கும் நாங்கள் அதைப் பரிந்துரைக்கிறோம்.
விக்கி மோரிஸ், கேஎஸ்2 ஆசிரியர் மற்றும் SENCO
-
Colégio Materdei
தேர்ந்தெடுப்புகள் மற்றும் விளையாட்டுகளுக்குள் கட்டளைகளின் விளக்கங்களின்வழியாக மேட்டிஃபிக் மாணவர்களுடைய தன்னியக்கத்தை வளர்க்கிறது. நடவடிக்கைகளின் நிகழ்-நேர அறிக்கை, மாணவர்களுடைய மதிப்பீட்டை வளப்படுத்துகிறது.
மவுரில்லிசா அப்பேட், கணினி ஆய்வக ஆசிரியர்
-
அக்லாம் கிரேன்ஜ் பள்ளி
மனத்தால் மட்டும் எண்ணக்கூடிய கணிதக் கருத்துகளை மாணவர்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள்என்பதை மாற்றியமைக்க, மேட்டிஃபிக் எனக்கு உதவுகிறது, ஒரு நேர்விதமான கணக்குப் பண்பாட்டை உருவாக்க உதவுகிறது, மாணவர்கள் கணக்கை விரும்பச்செய்கிறது.
டேனியல் பார்ட்ராம், முன்னணிக் கணித வல்லுனர்
-
லான்செஸ்டர் இபி தொடக்கப்பள்ளி
எண்ணறிவுக் கருத்துகளை கற்பிப்பதில் மேட்டிஃபிக் மிகவும் சிறந்து விளங்குகிறது. குழந்தைகள் தங்களுடைய கணிதக் கற்றலை எவ்வாறு வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உண்மையில் புரிந்துகொண்டுள்ளார்கள்.
மார்ட்டின் பெய்லி, எண்ணியச் செறிவூட்டல் தலைவர்