ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கான மேட்டிஃபிக் உடன் கணிதம் கற்றலை ஆன்லைன் கணித வள மூலம் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் கற்கிறார்கள்

21 ஆம் நூற்றாண்டுக் கற்பித்தல், கற்றல்

மேட்டிஃபிக் கருத்தியல் கணிதப் புரிதலை வளர்க்கிறது, மொழித் தடைகளைத் தாண்டிய கற்றலுக்கு வழிகாட்டுகிறது. உங்கள் வகுப்பறையில் தொழில்நுட்பக் கற்றல் வளைவை நீக்குங்கள், கணித வளர்ச்சிக்கான ஒரு மனநிலையை ஊக்குவிக்கிறது மேட்டிஃபிக் உங்களுடைய கற்பித்தல் சூழலை முழுமையாக்கி, கற்றலுக்கு வழிகாட்ட, கற்றலை எளிதாக்க உங்களுக்கு உதவுகிறது.

பயனருக்கு எளிதான மேட்டிஃபிக், மாறுபட்ட, பன்முகத்தன்மை கொண்ட வகுப்பறைகளில் மாணவர்களுக்குச் சவால்களைக் கொடுத்து ஈடுபடுத்துகிறது. மாணவர்கள் எளிதில் உள்நுழைந்து சுயமாகப் பணியாற்றத் தொடங்கலாம், எனவே, மதிப்புமிக்க வகுப்பு நேரம் ஒரு நிமிடம் கூட வீணடிக்கப்படுவதில்லை. எந்தவொரு கற்பித்தல் அணுகுமுறையையும் மாணவர்களுடைய கற்றல் பாணியையும் மேட்டிஃபிக் ஆதரிக்கிறது. உங்கள் வகுப்பறைக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்: தனிப்பயனாக்கப்பட்ட பாடத் திட்டங்களை உருவாக்கலாம், மாணவர்களுடைய முன்னேற்றத்தைச் சுறுசுறுப்பாகக் கண்காணிக்கலாம், அல்லது தானே கற்கும் முறைக்காகத் தரநிலைகளுடன் சீரமைக்கப்பட்ட தானியங்கு பாடக்கோப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

தரவுகளின் அடிப்படையிலான தகவல் மற்றும் அதிநவீன, தகவமைப்புத் தொழில்நுட்பங்களுடைய ஒரு கூட்டணியின் அடிப்படையில் மாணவர்களுக்கான பாடங்கள் தானாக ஒதுக்கப்படுகிறது. மாற்றாக, நீங்கள் பாடநெறியைக் கைமுறையாகவும் ஒதுக்கலாம். அது உங்கள் விருப்பம்! மாணவர்கள் வெறுமனே உள்நுழையலாம்; நடவடிக்கைகளை நிறைவேற்றலாம்; உடனே, மேட்டிஃபிக் அவர்களுக்கு அடுத்த வேலையை அமைக்கிறது. இது மிகவும் எளிதானது!

பள்ளியில், வீட்டில், எங்கும் மேட்டிஃபிக்கை பயன்படுத்துங்கள்!

உங்கள் விருப்பப்படி, நீங்கள் மாணவர்களுக்கு அருமையான செயல்பாடுகளை வீட்டுப்பாடமாகவோ, பள்ளி வேலையாகவோ ஒதுக்கலாம்.

மேட்டிஃபிக்கால் வகுப்பறையில் பல வழிகளில் வேலை செய்ய முடியும். எந்தக் கணினி அல்லது டேப்லெட்டிலிருந்தும் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் மேட்டிஃபிக்கைப் பயன்படுத்தலாம். சுலபம், நீங்கள் டேப்லெட்டுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுக்கு இணைய அணுகல்கூடத் தேவையில்லை.

மாணவர்கள் வீட்டிலிருந்து மேட்டிஃபிக்கில் வேலை செய்யலாம், ஒவ்வொரு மாணவரும் செய்துள்ள அனைத்து செயல்களையும் நீங்கள் பார்ப்பீர்கள், அவர்கள் எங்கு மேம்படலாம் என்பதற்கான பகுப்பாய்வையும் காண்பீர்கள்.

மாணவர்கள் தங்கள் வேகத்தில் வேலை செய்யலாம்

மாணவர்கள் தங்கள் வேகத்தில் வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்,மேலும் அவர்களுடைய கற்றலை அவர்களே உரிமையாக்கிக்கொள்கிறார்கள்.

கண்டுபிடிப்பு அடிப்படையிலான கற்றல் அனுபவங்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அவை அவர்களுடைய புரிந்துகொள்ளலை ஆழப்படுத்தவும், செயற்படுத்தவும், உபயோகப்படுத்தவும், மாணவர்கள் தங்களுடைய அறிவைப் பயன்படுத்துகிறார்கள், எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள், கருத்துப் பாணிகளைக் கண்டுபிடிக்கிறார்கள், தங்களுடைய பிழைகளைக் "கண்டுபிடிக்கிறார்கள்", சிக்கல்களைத் தீர்க்கத் தங்களுடைய உத்திகளை மாற்றியமைக்கிறார்கள், புதிய சூழ்நிலைகளுக்குக் கொண்டுசெல்லப்படும் புதிய கொள்கைகளைப் பொதுமைப்படுத்துகிறார்கள்.

மேட்டிஃபிக் ஆன்லைன் கணித நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகள் சிக்கல் தீர்ப்பதற்கும், கணித பகுத்தறிவிற்கும், கோணங்கள் மற்றும் நீளத்தை அளவிடவும்

மேட்டிஃபிக் செயல்பாடுகளை ஒரு கற்றல் சாதனமாகப் பயன்படுத்துங்கள்

மேட்டிஃபிக் நடவடிக்கைகள் நெகிழ்வானவை:
பாடத்தின் தொடக்கத்தில் ஓர் அறிமுக வழங்கலாக, பாடத்தின்போது ஒரு மாற்றமாக, ஒரு பாடச் சுருக்கமாக, அல்லது, பாடத்தின்போது வேறு எந்த நேரத்திலும் அந்த செயல்பாடுகளை சிறப்பாகப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு செயல்பாட்டுடனும் ஓர் ஆசிரியர் கையேடு வருகிறது, இது செயல்பாட்டின் பின்னால்உள்ள கற்பித்தலை விளக்குகிறது, புதிய கருத்துகளைப் புரிந்துகொள்ளவும் புதிய திறன்களை வளர்க்கவும் மாணவர்களுக்கு மேடிஃபிக் எவ்வாறு உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஒவ்வொரு செயல்பாடும் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாடத் திட்டத்துடனும் வருகிறது, உங்கள் பாடத்திட்ட நோக்கங்களை நிறைவு செய்யும் ஓர் ஒருங்கிணைந்த பாடமாக அமையும் மேட்டிஃபிக் செயல்பாடுகளின் வரிசையொன்றைக் கட்டமைப்பதற்கான சிறந்த வழிகளை இது உங்களுக்கு விவரிக்கிறது.

கூட்டல், கழித்தல், கலப்பு செயல்பாடுகள் மற்றும் புதிர் விடுவித்தல் போன்றவற்றிக்கானதே மேட்டிஃபிக் ஆன்லைன் கணித நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகள்

குழு வேலைகளில் மேட்டிஃபிக்கைப் பயன்படுத்தலாம்

மேட்டிஃபிக் செயல்பாடுகள் விவாதப் புள்ளிகளை உருவாக்குகின்றன, மேலும் மாணவர்களைச் சிரிக்கவைக்கின்றன. இதனால்,குழு வேலையில் நீங்கள் அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.

எங்களுடைய எந்தவொரு செயலையும் ஒரு வகுப்பறைச் செயல்பாடாக மாற்றி, மாணவர்களைச் சேர்ந்து வேலைசெய்யவைக்கலாம்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கான மேட்டிஃபிக் உடன் கணிதம் கற்றலை ஆன்லைன் கணித வள மூலம் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் கற்கிறார்கள்

அனைத்து மாணவர்களுக்காகவும் மேட்டிஃபிக்கைப் பயன்படுத்துங்கள்

விரைவான கற்றல் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு இது மேலும் ஆராய்வதற்கான சுதந்தரத்தைக் கொடுக்கிறது.

அதிகச் செயல்திறன் கொண்ட உங்கள் மாணவர்கள் கற்றல்மீது எப்போதும் ஈடுபாட்டுடன், கற்றலுக்கான ஆற்றலுடன் இருப்பார்கள், ஏனெனில், உயர்மட்டச் சிந்தனையைச் செயல்படுத்த மேட்டிஃபிக் பல்வேறு உள்ளடக்கங்களை வழங்குகிறது.

திட்டமிடப்பட்ட, நோக்கமுள்ள, மற்றும் வேறுபட்ட பாதைகள்மூலம் அனைத்து மாணவர்களுக்கும் மேட்டிஃபிக் துணைபுரிகிறது.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கான மேட்டிஃபிக் ஆன்லைன் கணித வளத்துடன் மாணவர் கணிதம் கற்றல்

உங்கள் வகுப்பறையை நிர்வாகியுங்கள்

நிகழ்-நேர அறிக்கைகள்மூலம் நீங்கள் அனைத்து மாணவர்களுடைய முன்னேற்றத்தையும் கண்காணிக்க மேட்டிஃபிக் உதவுகிறது.

அத்துடன், கருத்துகள் அடிப்படையில் அல்லது பாடத்திட்டத் தரங்களின் அடிப்படையில் மாணவர்களின் முன்னேற்றத்தை நீங்கள் பார்க்கலாம்.

ஒவ்வொரு மாணவருடைய செயல்பாட்டு வரலாறு, முன்னேற்றம் மற்றும் அடுத்த பணிகள் ஆகியவற்றை நீங்கள் ஒரே இடத்தில் காண்பீர்கள். நீங்கள் விரும்பினால், தானாக ஒதுக்கப்பட்ட இந்தச் செயல்பாடுகளை எளிதில் மாற்றலாம்.

மேட்டிஃபிக்கில் உங்களுக்காக நிகழ்-நேர, தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கைகளை உருவாக்க ஒரே க்ளிக் போதும்.

ஒவ்வொரு தலைப்பிலும் அல்லது பாடத்திலும் உள்ள மாணவர்களின் கணித முன்னேற்ற அறிக்கைகளை மேடிஃபிக் ஆசிரியர் டாஷ்போர்டில் காணலாம் எங்கள் அறிக்கைகளைப் பயன்படுத்திப்பாருங்கள்

எங்கள் பள்ளிகள் சில

Matific v4.39.1